Tuesday 17 January 2017

Salem ARUN 9514438445

Salem ARUN
9514438445

Short Nose & Long Tail Cocks

Parrot Beak Chicks
Hatching Eggs

Good Quality Hens Available For Sale

DELIVERY ALSO AVAILABLE ALL OVER INDIA/charges Apply

தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

parrot beak Quality Chicks & Eggs


Salem ARUN
9514438445

Short Nose & Long Tail Cocks
Parrot Beak Chicks
Hatching Eggs
Good Quality Hens Available For Sale

DELIVERY ALSO AVAILABLE ALL OVER INDIA/charges Apply
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.

கிளி மூக்கு சேவல் வளர்ப்பின் நன்மைகள்


 கிளி மூக்கு சேவல் வளர்ப்பின் நன்மைகள்
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும்ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின்அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காகமட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றிவளர்கலாம். பெரும்பாலும் விட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல்வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்துகாணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றிவளர்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.
Naatu Koli Enangal நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
குருவுக்கோழி,
பெருவிடைக்கோழி,
சண்டைக்கோழி அசில்கோழி,
கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
கொண்டைக்கோழி,
குட்டைக்கால் கோழி.
உயர்ரக நாட்டுக்கோழி இனம்
நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக்கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர்.பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளைஉற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.
Nattu Koli Thearvu கோழிகள் தேர்வு:
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில்கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம்பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக்குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மாரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத்தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக்கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின்மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமேஉபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்
Nattu Koli Valarpu Muraigal நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர்கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
மித தீவிர முறை
கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம்.கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
தீவிர முறை
கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
கூண்டு முறை
கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.
Meichala Valarndhaa Dhaan Athu Nattu Koli "மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
"பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டுநாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக்கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும்வித்தியாசமே இல்லாமப் போயிடும்.
Naatu Kolil Paramarippu நாட்டுக்கோழி பராமரிப்பு
இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.
வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு.
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து
கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
Muttaiyidum Naatu Koli Paramarippu முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
கோடைகால பராமரிப்பு
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால்உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில்சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும்இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில்கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது.பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும்உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல்சூட்டினை தணித்துக் கொள்ள முடியும்
.
குளிர்கால பராமரிப்பு
சிமென்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்புசக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளைவளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போதுகாற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை,எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும்.மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவைஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாககொடுக்கலாம்.
Koligalukau Sirantha Theevanam Asola கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா:
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள்அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம்நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன்மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது:
Nattu Koligaluku Karaiyan Theevanam நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்குவெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்துபார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லாகரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில்சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது.
Seyairkai Muari Kunju Poripagam செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இதுஇலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்
.
Nattu Koligalin Nala Melanmai நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளைகோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள்தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலைதூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளைபரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசிஅவசியம் போட வேண்டும்

DELIVERY ALSO AVAILABLE ALL OVER INDIA/charges Apply
Salem ARUN
9514438445
Short Nose & Long Tail Cocks
Parrot Beak Chicks
Hatching Eggs
Good Quality Hens Available For Sale